ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் கமல் மாதிரியே இருக்கும் பெண்..! வைரலாகும் வீடியோ..
Author: Vignesh6 April 2023, 4:30 pm
90ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹெச். வினோத், மணிரத்னம், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அ. வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்கு பின் துவங்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தை முடித்தபின் தான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே மேக்கப் போட்டுகொண்டு அவ்வப்போது வீடியோ வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது மேக்கப் மூலம் அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போலவே பெண் ஒருவர் மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
What a transformation??❤️#KamalHaasan? pic.twitter.com/6q6onC8U8G
— black cat (tribal) (@Cat__offi) April 5, 2023