அடடே… இது நல்லா இருக்கே.. திருமண கோலத்தில் அச்சு அசல் நயன்தாரா மாதிரியே இருக்கும் பெண்..!
Author: Vignesh20 March 2023, 1:15 pm
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.
இதில் விக்னேஷ் சிவன் தயாரித்து நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார்.
ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, பல சர்ச்சைகளை தொடர்ந்து கணவருடன் தற்போது, மும்பையில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர்களுடைய இரு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..