கோவத்தில் தட்டு, டம்ளர் பறக்கும்.. செல்வராகவன் குறித்து மனைவி கீதாஞ்சலி பளீச்..!
Author: Vignesh15 April 2024, 6:24 pm
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
மேலும் படிக்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. மனம் திறந்து பேசிய மௌனிகா..!
அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ. அதில் சோனியா அகர்வால் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் தான் இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு 2010ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
மேலும் படிக்க: இனி செட் ஆகாது.. Vijay TVக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா..!
பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீதாஞ்சலி இரண்டாம் உலகம் படத்தின் கதையை படித்து செல்வராகவன் மீது காதல் வந்தது.
அந்த காதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் ஆழமாகிக் கொண்டே தான் செல்கிறது. நான் முதல் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சரியாக வராததால் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால், உடல் எடை கூடிக் கொண்டே போய்விட்டது. அதன் பிறகு தான் இப்போது இயல்பாகி இருக்கிறேன். அந்த நேரத்தில், கோபத்தில் தட்டு டம்ளர் பறக்கும் அதை புரிந்து கொண்ட செல்வராகவன் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.