எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க : பிரபல இயக்குநரிடம் கெஞ்சிய நயன்தாரா…!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 2:32 pm

தென்னிந்திய சினிமாவை தனது கைக்குள் வைத்திருந்தவர் நயன்தாரா. தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தை உள்ளது. அதுவும் பெரும் சர்ச்சைக்கு பின் ஓய்ந்தது.

தற்போது நயன்தாரா நடித்துள்ள படங்கள் எதுவும் வெற்றியடையாததால் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக கவனம் செலுத்தி பிஸியாக இருக்கும் நடிகை நயன் தாரா, தனியார் ஊடகம் நடத்திய விருது விழாவிற்கு சென்று மேடையில் விருது வாங்கியப்பின் சில விசயங்களை பேசியுள்ளார்.

எப்போது நயன் தாரா மேடையில் தன் காதல் கணவர் மற்றும் ரசிகர்களை பற்றி மட்டுமே பேசி வருவார். ஆனால் இந்த விருதுவிழாவின் போது சற்று நயன் தாராவிடம் இருந்து மாற்றங்கள் காணப்பட்டது. நயன் தாரா யாரிடமும் வாய்ப்பு கேட்டு மேடையில் பேசியது கிடையாது.

அந்தவகையில் அந்த மேடையில் விருதினை வழங்கிய இயக்குனர் மணிரத்னம் அவர்களை பற்றி விடாமல் பேசியிருக்கிறார். மணிரத்னம் சார் இந்த விருதை கொடுத்தது எனக்கு பெருமை.

எல்லோருக்கும் ஒரு ட்ரீம் இருக்கும், ஒன்னு மணிரத்னம் மாதிரி இயக்குனராகிடனும் இன்னொன்னு அவர் இயக்கத்தில் நடிக்கனும் தான். ஒன்னு ரெண்டு படங்கள் இணைந்து செய்யவேண்டியது. ஆனால் அது நடக்க முடியாமல் போனது.

அவர் இயக்கத்தில் நடித்து அதற்கான விருதினை வாங்கினால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி மணிரத்னமிடம் வாய்ப்பு கேட்டு பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 641

    4

    2