7 நாட்கள் நிர்வாணப்படுத்தி மரத்தில் தொங்கவிட்ட இயக்குனர்..! பிரபல நடிகர் ஓபன் டாக்..!

Author: Vignesh
20 January 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் இன்று நடிப்பின் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் சூர்யா. அவர் இந்த அளவுக்கு தலைசிறந்த நடிகராக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் என்றால் அது பாலா தான்.

இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்கள் தான் சூர்யாவை ஒரு தரமான நடிகராக்கியது. சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த இரண்டு படங்கள் தான்.

இதனால் சூர்யா – பாலா இடையே நெருங்கிய நட்பும் உருவானது. இதன் காரணமாக தான் பாலா இயக்கத்தில் ஆர்யா – விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா சிறந்த இயக்குனராகவும் தனக்கென ஒரு பாணியில் தனித்துவமான காட்சிகளை வைத்து ஹிட் கொடுத்து வருபவர். இயக்குனர் பாலாவின் படம் என்றாலே மேக்கப் கொடுரமாகவும் ரியாலிட்டிக்காக நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிப்பை வாங்கும் திறமையுடன் என்று பலரால் புகழ்ந்து தள்ளப்பட்டார்.

bala - updatenews360

அதே சமயம் கலைஞர்களை படுமோசமாகவும் நடத்துவார் என்றும் விமர்சிக்கப்பட்டது. அதனாலே அஜித் நான் கடவுள் படத்திலும் சூர்யா வணங்கான் படத்திலும் எஸ்கேப் ஆகினார்கள்.

அப்படி தன்னை படுமோசமாக அதுவும் 14 நாட்கள் நிர்வாணமாகவும் 7 நாட்கள் நிர்வாணமாக்கி மரத்தில் தொங்கவிட்டதாக அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

gm-kumar - updatenews360

2011 ஆம் ஆண்டு ஆர்யா, விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவன் இவன் படத்தில் ஜமீனாக நடிகர் ஜி எம் குமார் நடித்திருப்பார். நடிகர் ஜி எம் குமார் தான் சமீபத்திய பேட்டியொன்றில் நிர்வாணப்படுத்தியிருந்தார் பாலா என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாலா ஒரு காமெடி சென்ஸ் கொண்டவர் என்றும் ஒரு குழந்தையை போன்றவர் என புகழ்ந்து நடிகர் ஜி எம் குமார் பேசியிருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 505

    2

    2