வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்க போறீங்க.. மீண்டும் படம் இயக்கும் இயக்குநர் இமயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 7:13 pm

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள அவரது குல தெய்வ கோவிலான கருமாத்தூர் ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன் கோவிலில் இன்று பொங்கல் வைத்து தனது புதிய படத்திற்கான பூஜை செய்து படப்பிடிப்பை துவங்கினார்.,

மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், படத்திற்கு தாய்மெய் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், தானே நாயகனாகவும், புதுமுக நடிகை மஹானா-வை அறிமுகம் செய்துள்ளார், பவதாரணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா., நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளேன், 6 ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள்.

1964 ல் ஒரு நடிகனாக வேண்டும் என திரை உலகத்திற்கு வந்தேன் அந்த வாய்ப்பு 84 வயதில் தான் கிடைத்தது அதனால் சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன்.,

என்ன தான் இருந்தாலும் இயக்குவதில் இருக்கும் பலம், சக்தி நடிப்பதில் கிடைக்காகது, நடிப்பது வேறு இயக்குவது வேறு, நீண்ட காலம் இயக்காமல் இந்தது ஒரு ஏக்கத்தை தந்தது, அதனால் இப்படி ஒரு படத்தை ஆரம்பித்துள்ளேன் என பேசினார்.,

மேலும் படத்திற்கு தாய்மெய் என்ற தாய் உண்மையானவள் என்ற தலைப்பு, ஒரு தாய் எப்படி பட்டவள் என்பதை சொல்லியுள்ளேன், என் மண் கருமாத்தூரில் துவங்கியுள்ள இப்படம் என் மண் சார்ந்த, என் மக்கள் சார்ந்த ஒரு படைப்பு எனவும், 25 நாட்களில் படம் முடியும் எனவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன், என்னையும், நாயகியாக அறிமுகம் ஆகும் மஹானா என்பவரையும் மூன்று கால கட்டத்தில் வாழ்வதை போல காணலாம், இதுவரை இல்லாத பாரதிராஜா போன்று இல்லாமல் வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்கலாம் என பேசினார்.,

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்