டேய் **தா.. பட அப்டேட் கேட்டு அசிங்கமா திட்டிய ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!

Author: Vignesh
2 March 2024, 10:33 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay - Updatenews360

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர்.

Goat vijay

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். ஆனால், சொன்னபடி வெளியாகாததால் கடுப்பான விஜய் ரசிகர் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று நீங்கள் சொல்லி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் அதற்கான அப்டேட் வரவில்லை என்று கூறியதோடு வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையில், திட்டி இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு விஜய்யின் ரசிகர் என்று கூட பாராமல் அவருக்கு பதிலடி கொடுத்து பதில் அளித்துள்ளார். அதில், கோட் படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை சொல்லலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க விஜய் அண்ணா ரத்தமே என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அதற்கு கீழும் விஜய் ரசிகர் ஒருவர் இல்ல பரவால்ல நீ படத்தை ஒழுங்கா எடு என கொஞ்சம் கூட மரியாதை தெரியாமல் அநாகரிகமான முறையில் கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். அதற்கும், கடுப்பாகாமல் வெங்கட் பிரபு ஓகே என்று பதில் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகாமல், விரக்தியில் இருக்கும் அஜித் ரசிகர்களே மகிழ் திருமேனியை ஒரு வார்த்தை கூட திட்டாமல் இருக்கும் நிலையில், விஜய் ரசிகர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து வருவது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 245

    0

    0