நாளே நாளில் அபார சாதனை படைத்த G.O.A.T – எத்தனை கோடி தெரியுமா?

Author:
9 September 2024, 9:55 am

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

goat

இப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களையும் தாண்டி மறைந்த நடிகரான விஜயகாந்த் நடித்துள்ளது போல் ஏஏ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் படத்திற்கு சுவாரசியத்தை தூண்டியிருந்தது .

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்துள்ளது.

goat movie

இதில் கிட்டத்தட்ட ரூ. 75 கோடிக்கு GOAT பிசினஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் ரூ. 130 கோடி வசூல் செய்தாலே Break Even என சொல்லப்பட்டது. அதற்கு இன்னும் 28 கோடிகளே மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே கோட் வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 214

    0

    0