நாளை சம்பவம்!! தளபதி ரசிகர்கள் எல்லாரும் தயாரா இருங்கோ…. G.O.A.T படத்தின் மாஸ் அப்டேட்!

Author:
30 August 2024, 7:51 pm

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

Vijay - Updatenews360

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நான்காவது பாடல் குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி G.O.A.T படத்தின் “மட்ட” என்கிற 4வது பாடல் நாளை வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் அலார்ட் ஆகியிருக்கிறார்கள்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?