வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் விஜய்யின் 68வது திரைப்படமாக வெளியாகி உலகம் முழுக்க விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களையும் தாண்டி மறைந்த நடிகரான விஜயகாந்த் நடித்துள்ளது போல் ஏஏ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் படத்திற்கு சுவாரசியத்தை தூண்டியிருந்தது .
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடையில் வெளியான இந்த திரைப்படம் கலமையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.
முதல் நாள் உலகளவில் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தாலும் ஆந்திர மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டுகளில் இரண்டு இடங்களில் இதுவரை ரூ. 4 முதல் 5 கோடி தான் வசூல் எட்டியிருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 21 கோடிக்கு பிசினஸ் செய்துள்ள நிலையில் வெறும் ரூ. 4 முதல் 5 கோடி வரை தான் வசூல் ஆகி இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அங்கு கூறப்படுகிறது.