தரமான டூயட்…. ‘ஸ்பார்க்’ GOAT மூன்றாவது சிங்கிள் டீசர் இதோ!

Author:
2 August 2024, 7:58 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

goat vijay

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக இந்த படத்தில் முதல் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இருந்தாலும் முன்னதாக வெளிவந்த விஜய்யின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்த பாடல்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது சிங்களாவது மிகச் சிறப்பாக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் சமயத்தில் தற்போது GOAT படத்தின் மூன்றாம் சிங்கிள் ‘ஸ்பார்க்’ பாடலின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

Goat

நாளை 6 மணிக்கு முழு பாடல் வெளியாக இருக்கிறது. விஜய் – மீனாட்சி சௌத்தரி இருவருக்குமான டூயட் பாடலான இதனை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து வ்ருஷா பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ:

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!