குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?
Author: Udayachandran RadhaKrishnan18 April 2025, 1:07 pm
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை கவர்ந்ததா என்றால் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.
ஒரு படத்தில் பாட்டு வைக்கலாம், ஆனால் படமே வெறும் பாட்டில்தான் ஓடுகிறது. அஜித்தை பெருமைப்படுத்தவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கதையே இல்லை, அஜித்தை தவிர மற்ற நடிகர்கள் சும்மா வருகிறார்கள் போகிறார்கள்.
இதையும் படியுங்க: இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!
ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்காக எந்த மெனக்கெடலும் போடவில்லை. மற்ற படங்களின் பாடல்கள் தான் உள்ளது. அஜித்தின் பழைய படத் வைத்தே ஓட்டியுள்ளனர் என ஏராளமான விமர்சனங்கள் வந்து விழுந்துள்ளன.
ஆனால் இதையெல்லா கண்டுகொள்ளாத ரசிகர்கள், படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வசூல் எகிறிக்கொண்டே செல்கிறது. ஆனால் இதுவரை படம் எத்தனை கோடி வசூல் செய்தது, இது ஹிட்டா இல்லையா என பல கேள்விகள் உள்ளது.

குட் பேட் அக்லி படத்தை ஆதிக் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது,. மக்களை இந்த படம் கவர்ந்ததா என்பது குறிதது போக போகத்தான் தெரியும்.
இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் முதல் நாள் 29.25 கோடி வசூல் செய்தது, இரண்டாத நாளில் 15 கோடி, 3வது நாளில் 19.75 கோடி, 4வது நாளில் 22.3 கோடி, 5வது நாளில் 15 கோடி, 6வது நாளில் 7 கோடி, 7வது நாளில் 5.55 கோடி வசூல் செய்துள்ளது.
உலகளவில் குட் பேட் அக்லி 196.5 கோடி வசூல் செய்துள்ளது. தமிழக அளவில் மட்டும் 113.05 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி படத்துக்கு போட்ட காசை எடுக்க முடியுமா என கேட்டால், இனி ஓடுனாதான் லாபமா என கேட்டால் அப்படி எல்லாம் இல்லை.
படத்தின் ஓடிடி, சேட்டிலைட் உரிமைகளில் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் படத்தின் வசூல் நிச்சயம் 300 கோடியை தாண்டிவிடும் என்றே கூறப்படுகிறது.