அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!

Author: Selvan
19 March 2025, 6:13 pm

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் – ரகுராம் பகிர்வு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜித் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதையும் படியுங்க: அப்பா இறந்தப்போ சிரிச்சாங்க…மனம் உடைந்து பேசிய பிரித்விராஜ்.!

இப்படத்தில்,முன்னணி நடிகர்களான த்ரிஷா,அர்ஜுன்,அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அஜித்துக்கு வில்லனாக டாக்டர் படத்தில் நடித்த ரகுராம் நடித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு,படக்குழு தற்போது தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் நடிகர் ரகு ராம் பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு,தனது பட அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில்,தென்னிந்திய திரைத்துறையின் கலாச்சார வித்தியாசங்களை பற்றி அவர் பகிர்ந்து கொண்டார்.”நான் டெல்லியில் வளர்ந்தேன், மும்பையிலும் வேலை செய்தேன்.அங்கே, அனைவரும் மேலதிகாரிகளை நேரடியாக பெயர் சொல்லி அழைப்போம்.அதே போல்,அஜித்துடன் படம் பணிபுரியும் போது அவரை பெயர் சொல்லியே அழைத்தேன்,ஆனால், அதை பார்த்த படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அஜித்தை ‘சார்’ என்று அழைக்க தொடங்கினேன் என்று கூறினார் இதன்மூலம்,தென்னிந்திய திரைத்துறையில் இருக்கும் மரியாதை மற்றும் பண்பாட்டுக் கோட்பாடுகளை நான் புரிந்துகொண்டேன் என்று கூறியிருப்பார்.

மேலும்,அஜித்தின் கடின உழைப்பை பாராட்டிய ரகு ராம் ,அவர் தினமும் 20 மணி நேரம் வேலை செய்து,ஒரே நேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளில் பங்கேற்றார்.அவருக்கு ஏதாவது ஒரு விஷயம் சாதிக்க வேண்டும் என்ற முயற்சி எப்போதும் இருக்கும் என்று புகழ்ந்து பேசினார்.

  • Vijay and Nizhalgal Ravi reunion விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!
  • Leave a Reply