ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…
Author: Prasad19 April 2025, 1:22 pm
ரசிகர்களுக்கான அஜித் படம்
கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை கொண்டாடித் தீர்த்துவிட்டனர். வெகுஜன ரசிகர்கள் இத்திரைப்படம் இன்ஸ்டா ரீல்ஸ் போல் இருப்பதாக விமர்சித்து வந்தாலும், “இது எங்களுக்கான திரைப்படம்” என்று அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இத்திரைப்படம் வெளிவந்த 5 ஆவது நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது ஒன்பதே நாட்களில் வேற லெவல் வசூலை அள்ளியுள்ளது இத்திரைப்படம்.
இவ்வளவு கோடி வசூலா?
அதாவது “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்து ஒன்பதே நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை உலகளவில் ரூ.200 கோடி வசூல் ஆகியுள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
The MASS SAMBAVAM is shaking the box office ❤🔥#GoodBadUgly hits 200 CRORES WORLDWIDE GROSS 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 18, 2025
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6vpJD#200crGrossForGBU#BlockbusterGBU#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @gvprakash… pic.twitter.com/CUrTW1NB2D
“விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான திரைப்படமாக அமைந்திருந்த நிலையில் அத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு நஷ்டத்தை கொடுத்தது. எனினும் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படம் பயங்கரமான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் மகிழ்ச்சியில் உள்ளன.
