பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…
Author: Prasad9 April 2025, 3:22 pm
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆரவாரமாக வரவேற்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மேல் இருந்து வரும் நிலையில் முன்பதிவில் டிக்கெட்டுகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் விற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல திரையரங்கத்தில் முதல் காட்சியை பெண்களுக்கென்று ஒதுக்கியுள்ளனர்.

பெண்களுக்கு மட்டுமே முதல் காட்சி
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அமைந்துள்ள மிகப் பிரபலமான திரையரங்கம் ஸ்ரீ சக்தி சினிமாஸ். நாளை இத்திரையரங்கில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 10) காலை முதல் காட்சி பெண்களுக்காக மட்டுமே திரையிடப்பட உள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்காக திரையிடப்படும் இந்த முதல் காட்சியை புக் செய்வதற்கான வாட்ஸ் ஆப் எண்ணை அத்திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ “X” தளத்தில் வெளியிட்டுள்ளனர்.