மங்காத்தாவையே தூக்கி சாப்பிட்ரும் போலயே… “குட் பேட் அக்லி” ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்!

Author:
10 October 2024, 1:44 pm

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரும் டாப் அந்தஸ்தில் இருந்து வருபவருமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது .

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதில் டான் லுக்கில் அஜித் காரில் வந்து இறங்குகிறார்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் வீட்டில் அசம்பாவிதம்… தீவிர சிகிச்சையில் ரவீந்திரன் – அடுத்தது வெளியேறப்போவது இவரா?

இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. முன்னதாக அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்துடன் வெளிநாட்டில் ஜாலியாக ரொமான்டிக் வாக் சென்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதன் மூலம் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அஜித் குடும்பத்தோடு சென்று இருக்கிறார் என்று தகவல் கசிந்து இருக்கிறது. தற்போது இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…