சும்மா அதிருதுல்ல…24 மணி நேரத்தில் ‘குட் பேட் அக்லி’ பிரம்மாண்ட சாதனை.!

Author: Selvan
2 March 2025, 11:13 am

மிரட்டி விட்ட GBU டீசர்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இப்படத்தி டீசர் 24 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில் பல சாதனைகளை புரிந்து மிரட்டியுள்ளது.

அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி,அந்த வகையில் கடந்த மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில்,தற்போது அனைவரும் குட் பேட் அக்லி படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்,மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்,பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டீசர் ரசிகர்களை மிகவும் குதூகலப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!

டீசரில் அஜித்தின் வசனங்கள் மற்றும் மாஸ் லுக்குகள் மிரட்டியுள்ளது,அஜித் பல கெட்டப்களில் வந்துள்ளதால் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.டீசர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழ் சினிமாவில் அணைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

கிட்டத்தட்ட 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, “MOST VIEWED KOLLYWOOD TEASER IN 24 HOURS”என இந்த சாதனையை கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் குட் பேட் அக்லி தரமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • Ajith Kumar expensive shirt in Good Bad Ugly அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!
  • Leave a Reply