கேட்டது விடாமுயற்சி அப்டேட் : கொடுத்தது GOOD BAD UGLY அப்டேட்.. ஆதிக்கால் IMPRESS ஆன AK FANS!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 7:04 pm
Gud
Quick Share

அஜித் தற்போது குட் பேட் அக்லி’ மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். தாமதமாக விடாமுயற்சி படப்பிடிப்பு காட்சிகள் வெளியானது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் GOOD BAD UGLY படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு நொந்து போன ரசிகர்களுக்கு ஆதிக் மூச்சு முட்டும் அளவுக்கு அடுத்தடுத்து அப்டேட் குடுத்து குஷியாக்கி வருகிறார்.

குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியல் வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென இன்று மாலை இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி மாலை 6.40க்கு வெளியான அப்டேட்டில் இரண்டாவது போஸ்டரில் மிரட்டலான அஜித் போட்டோ வெளியாகியுள்ளது.

2025 பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையைமைக்கிறார். ஏற்கனவே வீரம் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 92

0

0