முதல் நீ முடிவும் நீ.. சிறப்பாக முடிந்த மீதா ரகுநாத் திருமணம்.. வெளியான கலக்கல் போட்டோஸ்..!
Author: Vignesh18 March 2024, 5:33 pm
முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கடந்த 2022 ம் ஆண்டு அறிமுகமானவர் தான் நடிகை மீதா ரகுநாத். இந்த படத்திற்கு ஓடிடியில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதன் இடையே, குட் நைட் படம் மணிகண்டன் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது
சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற குட்நைட் படத்தின் ஹீரோயின் அனு போல், தன் மனைவி வேண்டும் என தற்போது சமூக வலைதளங்களில் அதிக இளைஞர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டு இருந்தது.
தனது, கணவருடன் மீதா ரகுநாத் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வந்தனர். மீதா ரகுநாத்திற்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருந்த நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது.