16 வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் இருந்து கோபிநாத் விலகல்? வெளியான அதிர்ச்சி காரணம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 5:02 pm

கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்/மதிப்பீட்டாளர், தொழிலதிபர், மற்றும் எழுத்தாளர் ஆவார்.

விஜய் டிவியில் இணைந்து மக்கள் யார் பக்கம் என்ற அரசியல் அலசல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2006ல் நீயா நானா மூலம் தனது பதவியை தொடங்கினார். மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, சிகரம் தோட்ட மனிதர்கள் மற்றும் என் தேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு தொகுப்பாளராக இருந்துள்ளார்! 2013 இல் என் மக்கள். அவர் ரேடியோ சிட்டியில் ரேடியோ ஜாக்கியாக (RJ) இருந்தார், மேலும் அவர்களின் காலை உணவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவரை அன்று முதல் தற்போதுவரை நிறுத்தாமல் நடத்தி கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா. தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம், திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் – அப்பெண்களின் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும் உடையில் இருந்து இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை முடிவு செய்கிறீர்கள் என விவாதம் நடந்தது.

ஒரு சிறிய விவாதம் நடந்த பிறகு கோபிநாத், உங்களுடைய மாமியார் எதாவது சொன்னால் மட்டும் ஏன் அதை ஏற்க மறுக்குறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்க்கு மறுபடியும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் என்று பெண்கள் சொல்ல நொ ந் துபோன கோபிநாத், நான் நிகழ்ச்சியில் இருந்து ரிட்டைர் ஆகிறேன் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே விளையாட்டாக வெளியேறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu