Live-in Relationship’ல் ஏமாற்றம்? கடன் பிரச்சனையில் சிக்கி தவித்தேன் – நடிகை சுனைனா Open Talk!

Author:
17 October 2024, 12:05 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சொந்த ஊராக கொண்ட நடிகை சுனைனா லட்சணமான முக அழகோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்து 2008 ஆம் ஆண்டு சுனைனா நடிகர் நகுல் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் காதலில் விழுந்தேன்.

இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சுனைனாவின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக நாக்க முக்கா என்ற பாடலின் மூலம் தமிழ்நாட்டு முழுக்க பிரபலம் ஆனார்.

sunaina - updatenews360

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது என்று சொல்லலாம். அந்த திரைப்படத்தில் கிடைத்த ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் வைத்துக்கொண்டு சுனைனாவுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன் பிறகு நீர் பறவை, சமர் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை சுனைனா.

இதனிடையே நடிகை சுனைனா துபாய் சேர்ந்த பிரபல youtubeரான காலித் அல் அமெரி என்ற நபரை காதலித்து வருவதாக காதல் கிசு கிசுக்கள் வெளியானது. ஆனால், அதை சுனைனா உறுதி செய்யவே இல்லை. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் நடித்துள்ள ராக்கெட் டிரைவர் படத்தின் அனுபவத்தை குறித்து கேட்கப்பட்டது. அத்துடன் சுனைனாவிடம் தனிப்பட்ட கேள்விகளும் கேட்கப்பட்டது.

லிவிங் டு கெதர் வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்வி கேட்டவுடனே டென்ஷன் ஆன சுனைனா தொகுப்பாளரை பார்த்து ஒரு முறை முறைத்தார். உடனே தொகுப்பாளர் அந்த டாபிக்கை மாற்றி திருமணம் எப்போது என கேள்வி கேட்க சுனைனா இப்போதைக்கு அது இல்லை என மழுப்பலான பதிலை கூறினார் .

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்காத போது பொருளாதார ரீதியாக எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்தித்து இருப்பீர்கள்? என கேள்வி எழுப்பியதற்கு… ஆம், எனக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாகவே நான் சந்தித்து இருக்கிறேன். பட வாய்ப்பு இல்லாத போது பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கலில் நான் இருந்து வந்தேன் .

sunaina - updatenews360

மேலும், அதிக கடன் சுமை எனக்கு ஏற்பட்டது. இது எல்லாருக்கும் வரும் பிரச்சினைதான். அதில் நானும் ஒருத்தர். மேலும் பொருளாதார ரீதியாக நான் பின்தங்கி இருந்தபோது பலரால் எனக்கு துரோகம் நிறைய. நேர்ந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: விவாகரத்து ஆன பெண்கள் வாழ்வதே கஷ்டம் – மனம் திறந்த காயத்ரி ரகுராம்!

அதன் பிறகு உங்களுடைய காதலன் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு உஷாராக பதிலளித்த நடிகை சுனைனா என்னுடைய காதலன் சினிமா மட்டுமே. நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். ஓய்வு நேரங்களில் அதிகமாக சினிமா பார்ப்பேன். வெப்சீரிஸ் அதிகமாக பார்ப்பேன் பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்காமல் ஹோம் ஒர்க் போல நான் படங்களை பார்ப்பேன் என சுனைனா பதில் அளித்திருந்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 369

    0

    0