பிரபல நடிகைக்கு சின்ன வீடு கட்டி கொடுத்த நக்கல் மன்னன்.. அம்பலப்படுத்திய பயில்வான்..!

Author: Vignesh
27 February 2023, 12:30 pm

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

goundamani - updatenews360.jpg 2

கவுண்டமணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் பயில்வான் ரங்கநாதனும் டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். தற்போது கவுண்டமணியின் காதல் ரகசியங்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் காது கூசும் அளவுக்கு தெரிவித்துள்ளார்.

bayilvan-ranganathan-updatenews360-4

டாப் நகைச்சுவை நடிகராக கவுண்டமணி இருந்தவர். அதே காலகட்டத்தில் நடிகை ஷர்மிலி கவர்ச்சி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர். நடிகை ஷர்மிலி இளம் வயதில் குரூப் டான்ஸ் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கி அதன் பின் இளவரசன், ஆவாரம்பூ போன்ற பல படங்களில் நடிகை ஷர்மிலி கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார்.

bayilvan-ranganathan-updatenews360-4

ஒரு சமயம் கவுண்டமணி சரக்கு அடித்துக் கொண்டே கவர்ச்சி நடிகை ஷர்மிலி ஊத்திக் கொடுக்க, டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். இது தெரியாமல் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அந்த அறைக்குள் சென்று விட்டாராம்.

உடனே கவுண்டமணி பயில்வனை பார்த்து, ‘எத்தனை முறை தான் நீ ஷர்மிலியின் புருஷனாகவும் நான் கள்ள புருஷனா நடிக்கிறது என கேட்டதாகவும், நீ பெரிய பயில்வான் ஆக இருப்பதால் ஷர்மிலியை தூக்கிக் கொண்டு பின் இறக்கி உன்னுடைய ஆசையை தீர்த்துகிற, ஆனா என்னால தூக்க முடியலையேப்பா என்று கவுண்டமணி போததையில் தெரிவித்ததாக பயில்வான் கூறியுள்ளார்.

பயில்வான் அப்போது ட்ரெண்டானதை விட இப்போது இவர் கிசுகிசு மன்னனாகவே மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் கவுண்டமணிக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே நிறைய அந்தரங்க பேச்சுக்கள் நடந்ததாக பயில்வான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அப்படி நக்கல் நையாண்டிக்கு பெயர்போன இந்த நக்கல் மன்னன் கவுண்டமணி, ஒரு காலத்தில் உச்ச நடிகராக இருந்தபோது, சர்மிளி எனும் ஒரு நடிகையோடு தொடர்பு வைத்திருந்த போது, அந்த நடிகைக்காக நிறைய செலவு செய்து இருப்பதாகவும் ஏன் ஒரு வீடு கட்டி கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

திரையில் பல நடிகர்களை வசனங்களால் விளாசித் தள்ளும் கவுண்டமணி, பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக வலம் வந்த போது, ஒரு சின்ன வீடும் வைத்து அதை மெயிண்டெய்ன் செய்து இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல இருக்கிறது என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

goundamani updatenews360

அதை இப்போது பயில்வான் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார். இந்த முறை கவுண்டமணியையும் அவருடைய காதல் ரகசியங்களை பற்றியும் உடைத்துப் பேசியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 600

    0

    0