நக்மாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காமெடி நடிகர்.. அடம்பிடித்து காரியத்தை சாதித்த சம்பவம்..!

Author: Vignesh
15 August 2023, 12:00 pm

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

goundamani -updatenews360

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். மேலும் உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து கவுண்டமணி பேசுவது வழக்கம். அவரின் காமெடியை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது போல் ரியல் வாழ்க்கையிலும் அவரது ஹூமர் சென்ஸ் நன்றாக இருக்குமாம்.

goundamani -updatenews360

இவர், பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிட்டும் நடிக்கவும் செய்து வந்திருக்கிறார். கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினிகாந்த், பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்களாம்.

கவுண்டமணியுடன் ஒரு சில நடிகர்களுடன் சேர்ந்தால் அவர்களது கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் சத்யராஜ். கவுண்டமணி மற்றும் சத்தியராஜ் இருவரும் சேர்ந்தால் படத்தில் மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக மாறிவிடும்.

இந்நிலையில், கவுண்டமணி காமெடியானாக பீக்-ல் இருந்த போது நடித்த படம் தான் மேட்டுக்குடி. அந்த படத்தில் எப்படியாவது நக்மாவை தன்னுடன் நடனமாட வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து. கடைசியில் ஒரு பாடலில் சில நிமிடம் நக்மாவுடன் இவர் கனவில் ஆடுவது போல் காட்சிகளை வைத்தாராம் இயக்குனர். கவுண்டமணி நினைத்ததை சாதித்து விட்டார் என அப்போதே செட்டில் கமெண்ட்கள் பறந்ததாம்.

goundamani-updatenews360

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1946

    0

    4