இந்த பாட்டுக்கு ஹீரோ தான் ஆடணுமா? இயக்குனரிடம் சண்டை போட்டு நடிக்க முடியாதென்று சென்ற பிரபல காமெடி நடிகர்..!

Author: Vignesh
28 November 2022, 6:00 pm

கவுண்டமணி சினிமா உலகில் பரபரப்புக்கு பேர்போனவர். அவரது சீனியாரிட்டி, அதிரடி கருத்துகளுக்காக பேசப்பட்டவர். கவுண்டமணி நீண்ட ஆண்டுகள் திரைத்துறையில் இருந்ததால் அவரிடம் பேசுவதற்கு பலரும் அஞ்சுவார்கள்.

இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி செய்த தரமான சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. 58 ஆண்டுகால திரையுலக அனுபவம் பெற்ற மூத்த நடிகர் கவுண்டமணி நடிகர் கவுண்டமணி தமிழ் திரை உலகின் வயதான நடிகர்களில் ஒருவர்.

goundamani updatenews360

1939 ஆம் ஆண்டு பிறந்தவர். நடிகை சௌகார் ஜானகிக்கு பிறகு தமிழ் சினிமா துறைகளில் வயதான கலைஞர் கவுண்டமணி என்று சொல்லலாம். தன்னுடைய 25 ஆம் வயதில் 1964 ஆம் வருடம் கவுண்டமணி திரைத்துறைக்கு வந்தார். மிக நீண்ட காலம் சாதாரணமாக சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

16 வயதினிலே படத்திற்கு பின் கவுண்டமணி திரையுலகில் திரும்பி பார்க்கப்பட்டார். ரஜினியுடன் கூடவே சுற்றும் கேரக்டர். பத்த வச்சிட்டியே பரட்ட என அவர் பேசிய வசனம் அப்போது மிகப்பிரபலம். சுருளிராஜன் மறைவுக்கு பின் விஸ்வரூபம் எடுத்த கவுண்டமணி அதே காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர் நடிகர் சுருளி ராஜன். நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்கள் மார்க்கெட் குறைந்து வந்த நேரத்தில் சுருளிராஜன் முன்னணியில் இருந்தார்.

goundamani updatenews360

1980 ஆம் வருடம் சுருளிராஜன் மறைந்ததை அடுத்து கவுண்டமணி முன்னுக்கு வந்தார். 1980ல் தொடங்கி 2010 ஆண்டுகள் மத்தி வரை கவுண்டமணி முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார். கவுண்டமணி செந்தில் ஜோடி தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. கவுண்டமணி சீனியர் நடிகர் என்பதால் பலரும் அவரிடம் பேசவே அஞ்சுவார்கள். நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு கவுண்டர் பாயிண்ட்களை அதிகம் வீசியவர் என்றால் கவுண்டமணி என்று சொல்லலாம்.

goundamani - updatenews360.jpg 2


அதற்காகவே அவருடைய பெயரை கவுண்டர் மணி என்று அழைக்க ஆரம்பித்தனர். உருவக்கேலி, டைமிங் வசனத்தால் பிரபலமான கவுண்டமணி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எந்த நடிகரை பற்றி இருந்தாலும் கவலைப்படாமல் முகத்துக்கு நேராக நச்சென்று அடிப்பவர் கவுண்டமணி. படங்களில் வசனத்தின் ஊடே உருவக்கேலி, மட்டம் தட்டி பேசுவது, டக்கென்று டைமிங் வசனம் பேசுவதால் கவுண்ட மணி பிரபலமானார். மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களில் கவுண்டமணிக்காக நகைச்சுவை நடிகர் வீரப்பன் எழுதிய வசனங்களால் மிகப்பிரபலமானார் கவுண்டமணி.

கவுண்ட மணி இருந்தாலே படம் ஓடும் என்கிற நிலை இருந்தது. கவுண்டமணி கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து ஓடியது. 90-களில் கவுண்டமணி நம்பர் ஒன் நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் சங்கர் ஜென்டில்மேன் படத்தை இயக்க படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக ஒப்பந்தமானார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடித்தார்.

goundamani - updatenews360.jpg 2


ஜென்டில்மேன் ஷூட்டிங்கள் கவுண்டமணி செய்த தரமான சம்பவம் அந்தபடத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணி செய்த தரமான சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. கவுண்டமணி ஒரு படத்திற்கு கால் ஷீட் கொடுத்தார் என்றால் அந்த படப்பிடிப்பு கேன்சல் ஆனால் வேறுபடுத்திற்கு கால் ஷீட் கொடுக்க மாட்டார். அதே போல் அந்த படபிடிப்பு என்ன காரணத்தால் கேன்சல் ஆனது என்று அறிய விரும்புவார்.

ஜென்டில்மேன் படத்திலும் அதேபோல் கவுண்டமணி நடிப்பதாக இருந்த காட்சி கேன்சல் செய்யப்பட்டு பாடல் காட்சி எடுக்க முடிவு செய்தார் இயக்குநர். ஒட்டகத்தை கட்டிக்கோ என்கிற பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஸ்டுடியோவுக்கு வந்த கவுண்டமணியிடம் கால்ஷீட் கேன்சல் ஆனதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் படபிடிப்புக்கு வந்துவிட்ட கவுண்டமணி நான் நடித்தே தீர்வேன் என்று வற்புறுத்தி உள்ளார்.

கனவு காட்சியில் ஹீரோ கூட குரூப் டான்சர் ஆடலாம் நான் ஆடக்கூடாதா? சார் இது ஹீரோ, ஹீரோயின் கனவு பாட்டு. அதில் நீங்கள் எப்படி? என்று படப்பிடிப்பு குழுவினர் சொல்ல ஏன் கனவு பாட்டுல ஹீரோ மட்டும்தான் ஆடணுமா? அவர் ஃபிரண்ட் அவர் கூட ஆட கூடாதா? என்று கேட்டு நானும் பாடலில் அவர் கூட ஆடுவேன் என்று சொல்ல, சார் அது கனவுக்காட்சி அதில் நீங்கள் எப்படி எனக்கேட்க, கனவுக்காட்சியில் ஹீரோவோட குரூப் டான்சர்கள் ஆடலாம் நான் ஆடக்கூடாதா? என்று வற்புறுத்தி அந்த படத்தில் கவுண்டமணியும் நடித்திருப்பார்.

இப்போது கவனித்தீர்களானாலும் நன்றாக தெரியும் பாடலின் நடுவே இடையிடையே கவுண்டமணி ஆடிக் கொண்டிருப்பார். ஆனால் குளோசப் ஷாட்டில் அவர் இருக்க மாட்டார். பெரிய நடிகர் பந்தா இல்லாமல் சீனை கேட்டு வாங்கிய கவுண்டமணி சில காட்சிகளை கவுண்டமணி தலை காட்டுவார் இதை அந்த பாடல் காட்சியை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

goundamani - updatenews360.jpg 2

தான் மிகப்பெரிய நடிகர் கால்ஷீட் கேன்சல் என்றால் அதை இன்னொரு படத்திற்கு கொடுத்து பணம் பார்ப்பதை விரும்பாத கவுண்டமணி சாதாரண நடிகர் போல் வற்புறுத்தி பாடல் காட்சியில் ஹீரோவுடன் சேர்த்து ஆடியது சுவாரசியமான சம்பவம் தான். இதே சங்கர் கூட்டணி அடுத்து கமல்ஹாசனை வைத்து சங்கர் இயக்கிய இந்தியன் படத்திலும் தொடரும். லஞ்சம் வாங்கும் ஆர்டிஓ அலுவலக உதவியாளராக வந்து காமெடியில் கலக்குவார் கவுண்டமணி.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 577

    0

    0