90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரம்பா. ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
90ஸ் காலகட்டத்தில் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து 2000 கால கட்டம் வரை பிரபலமான நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்தார். 1993ஆம் ஆண்டு முதன் முதலில் உழவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான நடிகை ரம்பா தொடர்ந்து அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலால் காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ரம்பா.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்பா கவுண்டமணியுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போது நடிகை ரம்பாவுக்கு கவுண்டமணி பல கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்தாராம். அதன் மதிப்பு அப்போதையே காலத்தில் மிகவும் குறைவாக இருந்தாலும் தற்போது கோடிக்கணக்கில் விலை போகும் என கூறப்படுகிறது.
ரம்பாவுக்கு கவுண்டமணி பரிசாக கொடுத்த அந்த வீட்டை கவுண்டமணியின் உறவினர்கள் சென்று திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரம்பா கொடுக்கவே மாட்டேன் என விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.
இதை அடுத்து ரம்பா மற்றும் கவுண்டமணியின் குடும்பத்தினர் கோர்ட் படி ஏறி அலைந்து திரிந்து இருக்கிறார்கள். பின்னர் இந்த வீடு ரம்பாவிற்கு சென்றதா? இல்ல அவர்கள் திரும்ப வாங்கிக் கொண்டார்களா?என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருந்தாலும் ரம்பாவுக்கு ஏன் அவ்வளவு மதிப்புள்ள வீட்டை கவுண்டமணி பரிசாக கொடுக்கணும்? அவர்களுக்குள் அப்படி என்ன உறவு இருந்தது? என கேள்வி எழுந்துள்ளது. இந்த தகவல் தற்ப்போது தீயாய் பரவி புது புயலாக கோலிவுட் கிளம்பி இருக்கிறது.