மீண்டும் களமிறங்கும் காமெடி கிங்… 84 வயதில் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி!

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள்.

அவர்கள் என்ன தான் நட்பாக பழகிவந்த போதும் சில புரிதல் இல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில் நீ இல்லாமலே நான் தனியாக நடித்தே பெரிய ஆள் ஆகுவேன் என கூற கவுண்டமணியும் சரி இனிமே அவனை என் படத்தில் போடாதீங்க தனியாவே நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் அவர்கள் தனித்தனியே நடித்த படங்களுக்கு செந்திலுக்கு மட்டும் அதிகம் வரவேற்பு கிடைத்ததாம் ஆனால், கவுண்டமணியால் தனியாக ஹிட் அடிக்கமுடியவில்லை.

அதுமட்டும் அல்லாமல் ரசிகர்களும் சேர்ந்து நடிப்பதை தான் அதிகம் விரும்பினார்களாம். அதனால் மீண்டும் ஈகோவை விட்டுவிட்டு ஜோடியாக சேர்ந்து படம் நடித்தார்களாம். இந்த இந்த ஜோடி எப்போது நடித்தாலும் ஒன்றாக சேர்ந்தே நடிப்போம். தனிப்பட்ட சண்டையெல்லாம் நடிப்புல வேண்டாம் என முடிவெடுத்தார்களாம். இந்நிலையில் தற்போது நடிகர் கவுண்டமணி தனது 84வது வயதில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

இப்படத்தை ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் தான் இயக்கவுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் , நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய வகையில் எடுக்கவுள்ளார்களாம். இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 84 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கப்போவதை காண ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Ramya Shree

Recent Posts

நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளரா போடுங்க : கொளுத்தி போட்ட பாஜக தலைவர்!!

அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

25 minutes ago

லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…

26 minutes ago

தே.ஜ கூட்டணிக்கு வாங்க… முக்கிய கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…

2 hours ago

கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்

தொடர் தோல்வி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

2 hours ago

செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு.. கொந்தளித்த நிர்வாகிகள் : என்ன நடந்தது?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க…

2 hours ago

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

17 hours ago

This website uses cookies.