ரஜினியை அதை பண்ண சொல்லுங்க.. நா ஹீரோவாக நடிக்கிறேன்.. ஷாக் கொடுத்த கவுண்டமணி..!

Author: Vignesh
25 March 2024, 5:32 pm

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள். தற்போது, எத்தனையோ காமெடி நடிகர்கள் பல காமெடிகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் காட்சியில் வரும் காமெடிகள் எப்போதும் மன மக்கள் மனதில் நிற்கும்.

goundamani rajini

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வாய்மை என்னும் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் எந்த ஒரு படத்திலும் கவுண்டமணி நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவுண்டமணி குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் தான் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் கவுண்டமணி ஒன்னா இருக்க கத்துக்கணும் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் என மொத்தமாக 40 நாட்கள் நடித்துள்ளார். அந்த சமயத்தில், ஏவிஎம் தயாரிப்பில் உருவாக உள்ள எஜமான் திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க கவுண்டமணியில் கேட்டுள்ளனர்.

goundamani rajini

15 நாட்களுக்கு கால்ஷிப்ட் வேண்டுமென்றும், அதற்கு சம்பளம் 15 லட்சம் என ஏவிஎம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு ஐம்பது லட்சம் சம்பளம் வேண்டும் என கவுண்டமணி கூறியுள்ளார். இதற்கு ஏவிஎம் நிறுவனம் ஷாக் ஆகி உள்ளனர். 15 நாட்களுக்கு ரூபாய் 50 லட்சம் என அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்களாம். சரி நான் ரூபாய் 15 லட்சம் சம்பளம் வாங்கி எஜமான் படத்தில் நடிக்க தயார். ஆனால், ஹீரோவாக நான் நடிக்கிறேன். ரஜினிகாந்தை எனக்கு காமெடியனாக நடிக்க சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த தகவலை, பிரபல இயக்குனர் வி சேகர் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 192

    0

    0