நடிகர் கவுண்டமணி:
காலத்தால் அழிக்க முடியாத நடிகராக இருந்து வரும் நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரை கவுண்டமணிக்கு முன் கவுண்டமணிக்கு பின் என்றுதான் நகைச்சுவை காட்சிகள் பிரித்துப் பார்க்கப்படும் .
அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர். நகைச்சுவை கலந்த நடிப்போடு கேலி, கிண்டல் உள்ளிட்டவற்றால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் கவுண்டமணி. பிரபல பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சேகர் நடிகர் கவுண்டமணி மற்றும் வடிவேலு குறித்து பேசி இருக்கிறார். வடிவேலுவின் மோசமான குணத்தை கவுண்டமணி அப்போதே கணித்ததாக கூறிய அவர் வடிவேலு என்ன பாக்க வந்த அப்போ பார்க்கும் பொத்தெம்ம் கால் தொட்டு தொட்டு கும்பிடுவான்.
காலில் விழுந்த வடிவேலு:
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்து வாட்டியாவது பார்க்கும்போதெல்லாம் காலை தொட்டு கும்பிடுவான். அப்போ அதை நோட்டமிட்ட கவுண்டமணி ஒருத்தன் வந்து உடனே கால தொட்டு கும்பிடலாம் அது தப்பு இல்ல.. அது ஒரு மரியாதை.
ஆனால், பார்க்கும்போதெல்லாம் பல தடவை வந்து வந்து விழுந்து கும்பிடுகிறான். அவன் கால வரப் போறான் அப்படின்னு அர்த்தம். அதுமட்டுமில்லாம அப்பவே அவர் நாங்க எல்லாம் படத்துக்காக நடிக்கிறோம்.
ஆனால் இவன் உண்மையிலேயே நடிகன்டா அப்படின்னு சொன்னாரு. கடைசியா அது உண்மை அப்படிங்கறது எனக்கு இப்பதான் தெரிய வந்தது. வடிவேலுவின் உண்மையான குணத்தை அன்றே கணித்தார் கவுண்டமணி என இயக்குனர் சேகர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.