அந்த பொண்ணு பார்க்க ஆம்பள மாதிரி இருக்கு… கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யார் தெரியுமா?..

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். மேலும் உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து கவுண்டமணி பேசுவது வழக்கம். அவரின் காமெடியை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது போல் ரியல் வாழ்க்கையிலும் அவரது ஹூமர் சென்ஸ் நன்றாக இருக்குமாம்.

இவர், பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிட்டும் நடிக்கவும் செய்து வந்திருக்கிறார். கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினிகாந்த், பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்களாம்.

கவுண்டமணியுடன் ஒரு சில நடிகர்களுடன் சேர்ந்தால் அவர்களது கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் சத்யராஜ். கவுண்டமணி மற்றும் சத்தியராஜ் இருவரும் சேர்ந்தால் படத்தில் மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக மாறிவிடும். அப்படிதான் ஒரு சமயத்தில், சத்யராஜ் நாயகனாக நடித்த திரைப்படத்தில் கவுண்டமணியும் நகைச்சுவை நடிகராக நடித்த தங்கம் என்ற திரைப்படத்தில் சத்யராஜ் ஹீரோயினுடன் நடித்த காட்சியை கவுண்டமணி அமைதியாக அமர்ந்து பார்த்து இருந்தாராம்.

அந்த படத்தின் காட்சி படமாக்கி முடிக்கப்பட்ட பின்னர் சத்யராஜை அழைத்து, அடுத்த 50 நாளைக்கு நீ ஆம்பள கூட தான் நடிக்கனும் என்று தொரிவித்துள்ளார் கவுண்டமணி. இதற்கு சத்யராஜ் ஆமா அண்ணே நீங்களும் ஆம்பள தான என சொல்ல, உடனே, அட நான் ஹீரோயின சொன்னேன்பா, அந்த பொண்ணு பார்க்க ஆம்பள மாதிரி தான் இருக்குன்னு உடனே வெளிப்படையாக சொல்லிவிட்டாராம் கவுண்டமணி.

இந்த தங்கம் படத்தில் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மலையாள நடிகை மேக்னா நாயர் தான் நடித்திருந்த அவரை தான் பார்ப்பதற்கு ஆம்பள மாதிரி இருப்பதாக கூறி கவுண்டமணி கிண்டலடித்து இருக்கிறார். இந்த தகவலை நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Poorni

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

8 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

9 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

11 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

12 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

13 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

14 hours ago

This website uses cookies.