போட்றா வெடிய… சிறப்பு காட்சிகளுடன் ரிலீஸ் ஆகும் “லியோ” – அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி?

Author: Shree
11 October 2023, 3:50 pm

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் வெளியாக வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இப்படி சர்ச்சையில் சிக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கண்டிப்பாக அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ரசிகர்களுக்காக படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால், சென்னையில் திரையரங்குக்கு வெளியே ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து இறந்ததை அடுத்து, ஜனவரி 2023 முதல் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள்/ அதிகாலைக் காட்சிகள் நடத்த திரையரங்குகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை.

இதனால் விஜய்யின் ‘லியோ’ படத்தையும் தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘லியோ’ படம் அதிகாலையிலே திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்திலும் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், ‘‘சுகாதார பாதிப்பு மற்றும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதாமல், காவல் துறையின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்போடு போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்று அரசுக்கு சுட்டிக் காட்டியது.

இந்நிலையில் இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விஜய்யின் லியோ படம் தமிழகத்தில் முதல் 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வெளியிடப்படும். அதன்படி அக்டோபர் 19 முதல் 24 வரை 5 காட்சிகள் வெளியிடலாம். ஆனால், அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. தமிழக அரசு விஜய்யின் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 628

    2

    0