AK 62 படத்தில் ஜிபி முத்து…? பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு அடித்த ஜாக்பாட்…!!

Author: Vignesh
9 November 2022, 12:30 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஜிபி முத்துவுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜிபி முத்து, முதல் நபராக வெளியேறியும் அதிர்ச்சி கொடுத்தார்.

GP Muthu - Updatenews360

முதல் இரண்டு வாரத்தில் அந்நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறியது அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.

மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அவரை வெளியே செல்ல அனுமதித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்துவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

GPmuthu-Updatenews360-6

இந்நிலையில், ஜிபி முத்துவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், அவரை அஜித் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்துவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 566

    0

    0