சென்னைக்கு முடியல.. தூத்துக்குடி மக்களுக்கு உதவிய G.P.முத்து.. இவரைப் பார்த்துக் கத்துக்கோங்கப்பா..!

Author: Vignesh
25 December 2023, 6:21 pm

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

GP-Muthu-1-Updatenews360

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார் ஜி பி முத்து.

வாழ்க்கையில் தனித்துவமாக எதையோ ஒன்றை செய்து சாதித்து காட்டியிருக்கும் ஜிபி முத்து சமீபத்தில் ரூ. 12 முதல் 15 லட்சம் மதிப்புள்ள Kia கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜி பி முத்து ஆர்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜிபி முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் மக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாலா, அறந்தாங்கி நிஷா, மாரி செல்வராஜ் என பலரும் உதவிவரும் நிலையில், ஜிபி முத்துவும் தனது பங்கிற்கு உதவி செய்து உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் நான் ஸ்ரீ வைகுண்டம், கருங்களம் பகுதிக்கு சென்றபோது என்னுடைய கார் குழிக்குள் மாட்டிக்கொண்டது. நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலமே தற்போது இல்லை.

gp muthu 1 - updatenews360

நான் என்னால் முடிந்த அளவிற்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன். என்னுடைய வீடு ஓட்டு வீடுதான் அதனால் அங்கு கொஞ்சம் ஒழுகத்தான் செய்யும் இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிறிய நடிகர்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனால், கோடி கோடியாய் சம்பாதிக்கும் பெரிய நடிகர்கள் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இவர்களை பார்த்தாவது திருந்துங்கள் என்று பேசி வருகிறார்கள்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!