“இடியின் கடவுள் Thor போல மாறிய ஜிபி முத்து”.. வாயடைத்து போன ரசிகர்கள் – வைரல் ஃபோட்டோ ஷூட்..!

Author: Vignesh
11 February 2023, 7:30 pm

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

டிக் டாக் ரசிகர்களுக்கு ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். ஜி பி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3 – ம் வகுப்பு வரைக்கும் தான் படித்து இருக்கிறார். ஜி பி முத்துவின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

GP-Muthu-1-Updatenews360

ஜி பி முத்து யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் ஜி பி முத்து யூடுயூப் சேனல் .

மேலும், யூடுயூபில் ஜி பி முத்துவுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் இவர் மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான்.

GPmuthu-Updatenews360-6

ஆனால், ஜி பி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்றுள்ளார்.

தற்போது குக் வித் கோமாளி ஷோவுக்காக ஜிபி முத்து ஹாலிவுட் கதாப்பாத்திரமான Thor போல கெட்டப் போட்டிருக்கிறார். அதில் ஜிபி முத்து அடையாளமே தெரியாத வகையில் தான் இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?