நயன்தாராவுக்கு ஜோடியாகும் ஜி பி முத்து?.. அவரே வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
4 July 2023, 2:30 pm

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமானா ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

இதையடுத்து அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜி பி முத்து.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே ஆதாம் னா யாரு என கமல்ஹாசனையே மலைக்க வைத்தார் ஜிபி முத்து. சிறுது நாட்களில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அது மட்டுமல்ல.. சன்னி லியோனோடு ஜிபி முத்து நடித்த ஓ மை கோஸ்ட் பட நிகழ்ச்சியில் பங்கேற்று.. ரசிகர்களின் ஆதரவுகளை சம்பாதித்தார். தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு நீண்டு கொண்டே போகிறது.

ஆனால், சன்னி லியோனுடன் நடித்த அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் ஜிபி முத்து அளித்த பேட்டியொன்றில், தனக்கு நயன்தாராவுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

gp muthu -updatenews360

ஜி பி முத்து அடுத்து பம்பர் என்ற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். அந்த படத்தின் பேட்டியில் தான் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 397

    1

    0