பிரபல நடிகரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம்.. வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்..!

Author: Vignesh
25 July 2024, 7:00 pm

பாலிவுட் இன் பாஷா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக்கான் இன்றும் ஹிந்தியில் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் உலகத்தில் செல்வம் மிகுந்த நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.

shah rukh khan

இந்நிலையில், ஷாருக்கானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் உருவம் பதித்த நாணயத்தை பாரிசில் இருக்கும் க்ரெவின் மியூஸியம் வெளியிட்டு இருந்தது. இதற்கு திரைதுறையில் இருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில், இவருக்கு தான் இந்த பெருமை முதல் முறையாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 166

    0

    0