சினிமாவில் இருந்து காணாமல் போன குணா பட ஹீரோயின்.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?..

Author: Vignesh
5 March 2024, 6:02 pm

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கமாக உள்ளது.

indian 2 kamal hassan

இந்நிலையில், சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் ரேகா புதுமுக நடிகை ரோஷினி என பலர் நடிக்க 1991 ஆம் ஆண்டு வெளியான படம் குணா. இந்த படத்தில், மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், அது ஒரு குகையில் எடுக்கப்பட்ட படம். அதில், ஒரு ஸ்பெஷல் பாடலும் வரும். அந்த பாடல் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது குணா படம் பற்றி பலரும் பேசுகிறார்கள். காரணம் இன்னொரு படம் தான். அதாவது, மலையாளத்தில் தயாரான மஞ்சுமெல் பாய்ஸ் என்ற படத்தில் குணா படத்தில் வந்த குகையை செட் போட்டு படம் எடுத்துள்ளனர்.

manjummel boys

இதனால், மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் குணா படம் குறித்து சமீப நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணா படத்தில் நடித்த நடிகை தற்போது எங்கு எப்படி இருக்கிறார் என கேள்விகளும் எழுந்து வருகிறது. இப்படத்தில், குணாவின் அபிராமியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரோஷினி.

guna film heroine

இவர் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான் அது குணா படம் மட்டுமே. அதன் பின்னர் அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. கமலுடன் ஒரே ஒரு திரைப்படம் நடித்துவிட்டு அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டாமல் இருக்கும் நடிகை ரோஷினி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

guna

சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாராம். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரோஷினிக்கு நடிப்பதில் விருப்பமில்லாத காரணத்தால் தான் குணா படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை எனவும், படத்தின் இயக்குனர் சந்தான பாரதி பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

guna

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 262

    0

    0