அடி வாங்கிய விடாமுயற்சி.. வருத்தத்தில் அஜித் ரசிகர் : ஆறுதல் கூறிய ஜிவி பிரகாஷ்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 10:42 am

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியானது. தியேட்டரில் 2 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் ரிலீசானதால் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதையும் படியுங்க : கதை எழுதாத பிரதீப்.. ஸ்ட்ரிட்டாகச் சொன்ன சார்.. யார் தெரியுமா?

ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. குறிப்பாக முதல் நாள் மட்டும் நல்ல கூட்டம், விமர்சனம் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்கள் கூட்டமே இல்லாமல் தியேட்டர் வெறிச்சோடியது.

அஜித் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ஜிவி பிரகாஷ்குமார்

படத்தில் தொய்வான திரைக்கதை தான் முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களாக வைக்கப்பட்டது. இந்த நிலையல் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படம் இப்பவே பயங்கர எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் கமிட் ஆன நிலையில் பட தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் விலகினார்.

GV Prakash consoled to ajith fan

இதையடுத்து நீண்ட வருடத்திற்கு பிறகு அஜித்துடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். இந்த நிலையில், விடாமுயற்சி படம் கலவையான விமர்சனத்தை பெற்றுவருவதால் வருத்தத்தில் உள்ள அஜித் ரசிகர் ஒருவர், ப்ரோ எங்களுடைய கடைசி நம்பிக்கை Good Bad Ugly மட்டும்தான், அந்த மியூசிக் நெருப்பை சேர்த்து விடுங்க சிதரட்டும் என ஜிவி பிரகாஷ்க்கு பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் கூறிய ஜிவி பிரகாஷ், ”தீயா வேலை செஞ்சுட்டு இருக்கேன். அதை நீங்க சீக்கிரமே தியேட்டரில் பார்ப்பீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply