திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
Author: Selvan9 January 2025, 9:05 pm
அச்சுறுத்தும்”கிங்ஸ்டன்”பட டீஸர்
தன்னுடைய அசாதாரண இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஜி வி பிரகாஷ்குமார்,இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி பல படங்களை தயாரித்ததும்,நடித்தும் வருகிறார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தாலும்,தமிழ் சினிமாவில் தன்னுடைய அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.
அந்த வகையில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்த ஆகி இருந்தார்.படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து,இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
டீசரை பார்க்கும் போது கடலில் நடக்கும் ஒரு திரில்லிங்கான கதையாக இருக்கும் என தெரிகிறது.இப்படத்தில் ஜி வி-க்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார் ஏற்கனவே இவர்கள் இருவரும் பேச்சலர் படத்தில் ஒன்றாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளதால்,இந்த படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தினை ஜி வி பிரகாஷின் பேராலஸ் யூனிவெர்ஸ் நிறுவனம் தயாரித்து, அவரே இசையமைக்கவும் செய்துள்ளார்,இப்படம் மார்ச் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.