“குட் பேட் அக்லி”….ரசிகர் கேட்ட கேள்வி…ஜி.வி.பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்…இணையத்தில் கலக்கல்..!
Author: Selvan12 December 2024, 5:46 pm
ரசிகரின் கேள்விக்கு ஜி.வி.பிரகாஷின் பதில்
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தை பற்றி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்த நிலையில் திடீரென படத்தில் இருந்து நீக்கியது படக்குழு,இதனால் புதிதாக ஜி வி பிரகாஷ் இணைந்து,இப்படத்திற்கு விறுவிறுப்பாக பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இதையும் படியுங்க: ரஜினியின் உயிர் நண்பன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…பரபரப்பில் கோலிவுட்..!
இந்நிலையில் அவருடைய X தள பதிவிற்கு ரசிகர் ஒருவர் “அண்ணே குட் பேட் அக்லி எப்படி போயிட்டு இருக்குது” என்று கேள்வி கேட்டுள்ளார்.
Anne #gudbadugly epdi poittu irukku
— AK Ramesh (@Mr_pure_soul) December 10, 2024
அதற்கு ஜி வி ஒரு “CELEBRATION OF LIFE” மாறி BGMக்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும் செமயா இருக்கும்ல என்று சொல்லியுள்ளார்.