தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!
மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)
இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது குறித்து, பலர் பிரிவுக்கு என்ன காரணம் என்று பலவிதமான கருத்துக்களை கூறியும் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டும் வந்தனர். இதை அறிந்த ஜிவி பிரகாஷ் போலியான தகவல்களை பகிர்ந்து வருபவர்களை கண்டித்து ஒரு அறிக்கை பதிவினை எக்ஸ்ஸ்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களிடம் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சில விமர்சனங்கள் காயப்படுத்துகிறது என்று கூறவே இந்த பதிவு என்று ஜிபி பிரகாஷ் அந்த பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
This website uses cookies.