‘லவ் டுடே’ – பட இயக்குரை அடுத்து முன்னணி நடிகரை கேலி செய்து இருக்கும் பிரபல பாடகர்.. தற்போது வைரலாகும் பதிவுகள்..!

Author: Vignesh
18 November 2022, 1:30 pm

லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரும் அப்படத்தின் கதாநாயகனுமான பிரதீப் ரங்ககநாதன் போட்டிருந்த பழைய ட்விட்டர் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திரிக்கு உள்ளாகி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசங்கள் பலரும் பிரபல சினிமா நட்சத்திரங்களின் பழைய ட்விட்டர் பதிவுகளை தீயாய் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் பழைய ட்விட் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

gv prakash - updatenews360

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ் . இவர் ஆஸ்கார் நாயகனான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்காவின் மகன் ஆவார். 2006ஆம் ஆண்டு வெளியான வெய்யில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் பொல்லாதவன், ஆடுகளம், ஆயுரத்தில் ஒருவன், சகுனி, குசேலன், அசுரன் என பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் இசையமைத்திருக்கிறார்.

gv prakash - updatenews360

இவரின் ஆயுரத்தில் ஒருவன் டீயின் இன்றும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. ஜென்டில் மேன் திரைப்படத்திலும் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.மேலும் ஜி.வி.பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகனாக அறிமுகமாக்கினார். பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கு முன்னர் குசேலன், நான் ராஜாவாக போகிறேன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு காட்சிகளில் தோன்றியிருக்கிறார். அதே போன்று பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ​​

gv prakash - updatenews360

இந்நிலையில் தற்போது மீண்டும் இசைத் துறைக்கு வந்திருக்கும் இவர் தனுஷின் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்திலும் இசையமைத்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா எடுக்கவிருக்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்நிலையில்தான் லவ் டுடே இயக்குனரும் நடிகருமான புகழ் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பழைய ட்விட்டர் பதிவுகள் பெரிய சர்ச்சைக்குள்ளாகி பிரச்சனையாக மாறி வரும் வருகிறது.

Dhanush updatenews360 2

அவற்றில் சில உண்மையானவை என்றும் சில பொய்யான போட்டோ ஷாப் செய்யப்பட்டவை என்றுபிரதீப் விளக்கமளித்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் சில நெட்டிசன்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரபல நடிகர்களை திட்டுவது போன்று கடந்த காலங்களில் போட்டிருந்த ட்விட்டர் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதுவும் தனுஷ் குறித்து இவர் போட்டு இருக்கும் பழைய பதிவுகள் தற்போது வைராகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 377

    0

    0