போடுறா வெடிய.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த பிரபலம்..!
Author: Vignesh26 May 2023, 3:50 pm
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட் மற்றும் சாணி காகிதம் . இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது.
இதனிடையே, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான போது மக்கள் மத்தியில் குறைந்த அளவு வரவேற்புகளையே பெற்றது.
ஆனால், பின் நாட்களில் ஆயிரத்தில் ஒருவன் பலரும் பேசக்கூடிய திரைப்படமாக அமைந்தது. இப்படிப்பட்ட வரவேற்புகளைப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இப்போது, சுமார் 13 ஆண்டுகள் கழித்து உருவாக இருக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறிதாவது, ‘நடிகர் தனுஷ் நடிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′ திரைப்படம் தயாராகிறது. இந்த படத்தில் கதையை செல்வராகவனிடம் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.