குட்டி ‘சைந்தவி’ என் கூடவே இருக்காங்க…பாச மழை பொழிந்த ஜி.வி.பிரகாஷ்.!
Author: Selvan20 February 2025, 9:06 pm
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: நண்பர்களால் உயிரை விட்ட என் அப்பா..பிரபல நடிகரின் மகன் உருக்கம்.!
சிறு வயதில் இருந்து ஜி வி பிரகாஷும் சைந்தவியும் ஒருவரையொருவர் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டனர்,திருமணத்திற்கு பிறகு சுமுகமாக சென்ற இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது,அதன் பிறகு சமீபத்தில் இருவரும் மனதார பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்கள்.
இருவரும் மீண்டும் சேர்ந்திட மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் போது ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல் வைரல் ஆகி வருகிறது.அதில் சைந்தவி எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே தெரியும்,சைந்தவிக்கு எப்போதுமே நல்ல மனசு இருக்கு,ஆனால் சில காரணங்களால் எங்களுடைய திருமண வாழ்க்கையை தொடர முடியவில்லை என்றாலும்,தற்போது நாங்கள் இருவரும் ஒரு நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறோம்.
மேலும் எங்களுடைய வீட்டில் எப்போதும் என்னுடைய மகள் ராஜ்ஜியம் தான் ,வார இறுதியில் என்னுடைய மகள் என்னுடன் இருப்பாங்க,மற்ற நாட்களில் அவுங்க அம்மா கூட இருப்பாங்க,என்னுடைய மகள் எனக்கு ஒரு குட்டி சைந்தவி என்று பாச மழை பொழிந்துள்ளார்.