ஜி வி பிரகாஷ் உடன் இணையப்போகும் சைந்தவி…சர்ப்ரைஸ் வீடியோவால் கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்…!

Author: Selvan
21 November 2024, 3:23 pm

இசையால் சேரும் ஜி வி பிரகாஷ்-சைந்தவி

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் பாடகி சைந்தவியை சிறுவயது முதல் காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அன்வி எனும் 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

Saindhavi G.V. Prakash Performance Malaysia

விவகாரத்துக்கு பிறகு ஜி வி பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த அமரன் திரைப்பட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பாடகி சைந்தவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

இதையும் படியுங்க: தளபதி 69-ல் இணைந்த வாரிசு நடிகை…! வீடு தேடி வந்த வாய்ப்பு..

தற்போது மீண்டும் ஜி வி பிரகாஷ்-சைந்தவி இணையப்போகிறார்கள்.அதாவது அடுத்த மாதம் 7 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செலிபிரேஷன் ஆஃப் லைஃப் என்ற பெயரில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்கிறது. அதில் சைந்தவி பாடல் பாடப்போகிறார். அதனை சைந்தவியே,ஜிவி பிரகாஷ் சார் இசை கச்சேரியில் பாடப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை பாடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன் குரலால் கவர்ந்தார்.

என்னதான் விவாகரத்து பெற்று,பிரிந்தாலும் இசைக்காக மீண்டும் அவர்கள் இணைவதை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இதே மாதிரி வாழ்க்கையிலும் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 184

    0

    0

    Leave a Reply