கோடிகளை கொட்டி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்.. ஜி.வி.பிரகாஷ் ஃபாலோ பண்ணும் அந்த விஷயம்..!

Author: Vignesh
10 February 2024, 11:34 am

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

g v prakash -updatenews360

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

GV Prakash - Updatenews360

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் எத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதாவது, சூதாட்ட விளம்பரம் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தூதராக இருக்க ரெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Ajith Make Phone call During Adhvik Watch GBU FDFS உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!