அந்த மாதிரி படங்களில் முதலில் நடிக்க மறுத்த ஜி.வி.பிரகாஷ்.. வெளிவந்த காரணம்.?

Author: Rajesh
29 May 2022, 2:54 pm

தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இவர் நடிப்பில் அடுத்ததாக 13 எனும் திகில் திரைப்படம் தயாராகிறது. இதில் கெளதம் வாசுதேவ் மேனன் ஜிவி உடன் நடித்துள்ளார். இந்த படத்தை விவேக் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் போது, ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, இந்த படம் திகில் படம். டார்லிங் படத்திற்கு பிறகு திகில் படத்தில் நடிக்கவில்லை. வாரம் ஒரு திகில் படம் ஒரே மாதிரியாக வருகிறது. அதனால், வேண்டாம் என தவிர்த்து இருந்தேன். அந்த மாதிரியான திகில் படங்களே வேணாம் என இருந்தேன் . இந்த பட தயாரிப்பாளர் இந்த பட கதை கேளுங்கள் என கூறினார். உடனே நானும் கேட்டேன். கதை புதியதாக இருந்தது. உடனே சம்மதித்து விட்டேன்’ என கூறினார் நடிகர் ஜிவி.பிரகாஷ்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 592

    0

    0