அவருக்காக எழுதிய கதையை சிம்புவை வைத்து எடுத்தேன்… VTV ரகசியத்தை உடைத்த கவுதம் மேனன்..!

Author: Vignesh
31 March 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன், மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார். அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை கவுதம் மேனன் இயக்கினார்.

சமீபத்தில், பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அவருக்காக ஒரு கதை எழுத தொடங்கியதாகவும், ஆனால் அவர் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பவர் என்பதால், தனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது என்று தெரிவித்தார்.

மேலும், கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதியதாகவும், பின்னர் அந்த கதையில் மகேஷ்பாபு நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தநிலையில், அதன் பின்னர் தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை கவுதம் மேனன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!