திருமணமான முதல் நாளே சுயரூபத்தை காட்டிய ஹன்சிகா..! ஆச்சரியத்தில் ஆடிப்போன குடும்பம்..!
Author: Vignesh9 December 2022, 7:30 pm
பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது.ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. சோஹைல் கதுரியா கடந்த சில ஆண்டுகளாக ஹன்சிகாவின் பிசினஸ் பார்ட்னராக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறியது.
தற்போது இருதரப்பின் குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகா – சோஹைல் கதூரியா இருவரும் சிகப்பு நிற மேட்சிங் மேட்சிங் உடையில் ஜொலித்தனர். அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது ஹன்சிகா மாமியார் வீட்டில் சமையல் செய்திருக்கிறார். எல்லோருக்கும் அவர் அல்வா செய்து கொடுத்திருக்கிறார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.