ராஷ்மிகாவாக மாறிய ஹன்சிகா.. ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம்..!
Author: Vignesh15 June 2024, 10:41 am
நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.
இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது.
அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குண்டாக புஷ் புஷ் அழகாக இருந்த ஹன்சிகா திடீரென ஆள் அடையாளமே தெரியாமல் படு ஒல்லியாக மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது மேலும் மேலும் உடல் எடையை குறைக்க கம்பியில் உடலை வளைத்து நெளித்து ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதுக்கு மேலயும் நீங்க ஒல்லியாகணுமா? என ரசிகர்கள் வெறுப்புடன் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.
முன்னதாக, 33 வயதாகும் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து சம்பாதித்து வருகிறார். தற்போது, ஹன்சிகாவின் டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. புஷ்பா 2 பாடலுக்கு தான் அவர் தாவணியில் கியூட்டாக டான்ஸ் ஆடி உள்ளார். ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.