பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது.ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. சோஹைல் கதுரியா கடந்த சில ஆண்டுகளாக ஹன்சிகாவின் பிசினஸ் பார்ட்னராக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறியது.
தற்போது இருதரப்பின் குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகா – சோஹைல் கதூரியா இருவரும் சிகப்பு நிற மேட்சிங் மேட்சிங் உடையில் ஜொலித்தனர். அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, தனது மெஹந்தி புகைப்படங்களை ஹன்சிகா முதலில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம், கத்திரினா கைஃப்பின் திருமண புகைப்படத்தை நினைவூட்டியதாக சிலர் இணையத்தில் தெரிவித்திருந்தனர். அதேபோல், ஹன்சிகா, கத்திரினா இருவரின் திருமணம் ராஜஸ்தானில்தான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
This website uses cookies.